மொய்த்ரா, ஹிராநந்தானி இன்று ஆஜராக சம்மன்: அமலாக்கத் துறை அனுப்பியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராககேள்வி கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொத்ரா லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக நடந்த விசாரணைக்குப் பிறகு மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, இவர் மீதான புகார் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அத்துடன் அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக மொய்த்ரா மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மார்ச் 28-ம் தேதி (இன்று) ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ரா, தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

விசாரணையின்போது, அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் இருவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்ய அமலாக்கத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, என்ஆர்இ வங்கிக் கணக்கு மற்றும் வெளிநாட்டில் இருந்து பெற்ற ரொக்கப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில்மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும்போட்டியிட மொய்த்ராவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாய்ப்புஅளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்