சூரிய சக்தியில் 2,200 செல்போன் கோபுரங்கள்: நக்ஸல் பாதிப்பு பகுதிகளில் நிறுவ திட்டம்

நாட்டிலேயே முதன்முறையாக நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 9 மாநிலங்களில் சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய 2,200 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட உள்ளன.

ரூ.3,216 கோடி செலவில் அமைய உள்ள இந்த கோபுரங்கள், மின்சாரம் மற்றும் ஜெனரேட்டரின் உதவியின்றி இயங்கும். செல்போன் கோபுரங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத சூரிய மின் சக்தியை பயன்படுத்துவது இதுவே முதன்முறை என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 20-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இது அடுத்த ஓராண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் இல்லாததால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆபத்து காலத்தில் உரிய நேரத்தில் உதவ முடியாத சூழல் நிலவுகிறது. அத்துடன் நக்ஸல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் தொலைத்தொடர்பு வசதி இல்லாதது தடைக்கல்லாக இருந்து வருகிறது.

இதனால் நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவ வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு முதலே மத்திய உள் துறை அமைச்சகம் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்