உத்தர பிரதேசத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. 80 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வென்றது. சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலேயே வென்றது. பாஜக 62 இடங்களில் வென்றது.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து களமிறங்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக அங்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், நேற்று அக்கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மையாக உள்ள சாதி,
மத அடிப்படையில் வேட்பாளர்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளது. ராம்பூர் தொகுதியில் ஜீஷன் கான், சம்பாலில் ஷவுலத் அலி, அம்ரோஹாவில் முஜாஹித் ஹூசைன், மீரட்டில் தேவ்ரத் தியாகி, சஹரான்புரில் மஜித் அலி, கைரானாவில் பால் சிங், முசாபர்நகரில் தாரா சிங் பிரஜாபதி போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago