மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகிறார் ஜனார்த்தன ரெட்டி 

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சுரங்க தொழிலதிபரும், முன்னாள் அமைச்சருமான ஜி.ஜனார்த்தன ரெட்டி இன்று (திங்கள்கிழமை) மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகிறார்.

இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், “நான் பாஜக தலைவர்களைச் சந்தித்தேன். பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக அதே பதவியில் காண பாஜகவில் இணைவதாக அவர்களிடம் தெரிவித்தேன். நான் எனது 25 வது வயதிலிருந்து பாஜக தொண்டனாக இருந்திருக்கிறேன். அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டபோது நான் தீவிர பாஜக தொண்டனாக இருந்தேன்” என்று கூறினார்.

கர்நாடகாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் சீடரான ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரியில் பாஜகவை வளரச் செய்தவர். பெல்லாரியில் 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து சுஷ்மா ஸ்வராஜ் களமிறங்கினார். அப்போது சுஷ்மாவின் பிரச்சாரத்துக்கு ஆதரவாக நின்றார். தேர்தலில் சுஷ்மா தோல்வி கண்ட போதும், சுஷ்மா அதிக வாக்குகளைப் பெற ஜனார்த்தன ரெட்டிதான் காரணமாக இருந்தார். கர்நாடகாவில் கடந்த 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அப்போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஜனார்த்தன ரெட்டி.

இவர் கனிம சுரங்க தொழில் செய்து வருகிறார். பெல்லாரி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சுரங்கங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையேதான் ஜனார்த்தன ரெட்டி மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக மாறினார். இதனிடையே அவர் மீது கனிம வள சுரங்க முறைகேடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்து இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பாஜகவுடன் எந்தத் தொடர்பையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.

பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியைத் தொடங்கினார். மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் தன்னை பாஜகவில் ஐக்கியமாக்கிக் கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்