லடாக் லே பகுதியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: லடாக்கின் லே பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஹோலி பண்டிகை கொண் டாடினார்.

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, லடாக் யூனியன் பிரதேசத் தின் சியாச்சின் பனிமலைப் பகுதியில் (உலகின் உயரமான போர்க்களம்) பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுடன் நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாட மத்திய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் மோசமான வானிலை நிலவுவதால், அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பயணத்தை மாற்றி அமைத்தார். சியாச்சினுக்கு பதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று லே பகுதிக்கு சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் அவர் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “லடாக் நிலப்பகுதி யானது சாதாரணமானது அல்ல. நமது அரசியல் தலைநகரம் டெல்லி, நமது பொருளாதார தலைநகரம் மும்பை, நமது தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூரு என்பதை நாம் அறிவோம். இதுபோல லடாக் என்பது துணிச்சல் மற்றும் வலிமையின் தலைநகரமாக விளங்குகிறது” என்றார்.

உலகின் 2-வது பெரிய பனிமலை: இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய பனிமலை என அழைக்கப்படுகிறது. இது உலகின் 2-வது பெரிய பனிமலை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE