அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்ட ஹோலி விழா: தலைமை அர்ச்சகர் தகவல்

By செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தர பிரதேசம் அயோத்திராமர் கோயிலில் இன்றும் நாளையும் ராமர் கோயிலில் ஹோலி பண்டிகை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியதாவது:

ராமர் கோயிலுக்கு நாள்தோறும்சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளது.கோயில் திறக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஹோலி பண்டிகையை கொண்டாட உள்ளோம். எனவேமிக பிரம்மாண்டமாக பண்டிகையை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பால ராமருக்கு வண்ண பொடிகளை பூசி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்படும். கடந்த ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழா போன்று ஹோலி பண்டிகையும் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.

இவ்வாறு தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகா சாதுக்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். ஹோலி பண்டிகை தொடர்பாக அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ்கரண் ஆகியோர் தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE