சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதாவை இந்தியா அழைத்து வந்த போலீஸ்: குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவில் கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவை தொடர்பான 8 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் பிரசாத் புஜாரி என்கிற சுபாஷ் விட்டல் புஜாரி. மும்பை நிழல் உலக தாதாக்களான குமார் பிள்ளை மற்றும் சோட்டா ராஜனின் கூட்டாளியாக ஒருகாலத்தில் இருந்தார்.

இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில்பிரசாத் புஜாரி பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸ் இன்டர்போலுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் துப்பு கிடைத்தது. சீன பெண்ணை திருமணம் செய்து சீனாவின் ஷென்சன் நகரில் மனைவி, குழந்தையோடு வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

போலி பாஸ்போர்ட் மூலம் ஹாங்காங்கில் இருந்து ஷென்சன் செல்லஅவர் புறப்பட்டபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி சீனாவில் இருந்து மும்பை நகருக்கு விமானம் வழியே அவர் நேற்று அழைத்து வரப்பட்டார். பின்னர் மும்பை குற்றப்பிரிவு போலீ ஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்