அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்க அனுமதித்தால் போராட்டம் நடத்தப்படும் என மாணவர் பேரவை எச்சரிக்கை வி்டுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மார்ச் 7ம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜகவை சேர்ந்த மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலருக்கும், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாணவர் பேரவை தலைவர் முகமது பத் கூறியுள்ளதாவது
“நாட்டின் குடியரசு தலைவர் என்ற முறையில் ராம்நாத் கோவிந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதை வரவேற்கிறோம். அதேசமயம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும் மக்கள் விரோத, சிறுபான்மையினர் விரோத செயல்களில் ஈடுபடுகிறது. எனவே பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளோ பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பல்கலைக்கழக நிர்வாகம் இதனை அனுமதித்தால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். பட்டமளிப்பு விழா சுமுகமாக நடைபெற அவர்களை தவிர்ப்பது நல்லது’’ எனக்கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago