சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் போட்டி - தமிழக காங். 7 வேட்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தவிர, அசாம், அந்தமான் & நிகோபார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்