பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சிக்கப்பள்ளாப்பூர் பாஜக எம்பி பச்சே கவுடா கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள சிக்கப்பள்ளாப்பூர் பாஜக எம்.பி. பச்சே கவுடா கடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியை தோற்கடித்தார். அதனால் வருகிற மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாஜக மேலிடம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இதனிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவரது மகன் ஷரத் பச்சே கவுடா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் பாஜக மேலிடம் இவரை கட்சி பணிகளில் இருந்து ஓரங்கட்டியதாக தெரிகிறது.
இதனால் அதிருப்தியில் இருந்த பச்சே கவுடா நேற்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர், மாவட்ட தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் பச்சே கவுடாவின் விலகல், சிக்கப்பள்ளாப்பூர் தொகுதியில் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago