புது டெல்லி: ‘மோடி பரிவார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள்ளிட்ட மத்திய அரசு விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகும் மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதங்களில் கூறியிருப்பதாவது:
பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மீது தொடுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான பொய் வழக்கு சட்ட ரீதியாக முறியடிக்கப்பட்ட பிறகும்பாஜக இதுகுறித்து இன்று வரைபொய் பரப்புரை விளம்பரங்கள்செய்து வருகிறது. இத்தகையவிளம்பரங்கள் உடனடியாக நீக்கப்பட்டு அதை உருவாக்கியவர்கள் மற்றும் பதிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அடுத்து, ‘மோடி பரிவார்’ விளம்பரம் மூலம் அரசின் நிதி ஆதாரமும்அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இத்தகைய விளம்பரங்களை பரப்ப மத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிர்ப்பந்திக்கப்படுவதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதுதவிர பிரதமரே நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்வதுபோல பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட்டில் அச்சடிக்கப்பட்ட வாசகங்களுடன் சுற்றறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் உலா வருகிறது.
இது கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும். இதுபோன்று சுற்றறிக்கையை பகிர்பவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, டெல்லி மெட்ரோ ரயில்களிலிருந்து ‘மோடி உத்தரவாதம்’ விளம்பரப் பலகைகள் இன்னும் நீக்கப்படவில்லை. அரசுநிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் பலவற்றில் இன்னமும் பிரதமரின் புகைப்படங்களை அப்புறப்படுத்தாமல் இருப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறலாகும்.
இவை எல்லாவற்றையும்விட பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஆபாசமாகசித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஐபிசிசட்டப்பிரிவு 1860-ன் கீழ் மற்றும்மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் இத்தகைய முறைகேடான கருத்துகளை உருவாக்கியவர்கள் மீதும் அதனை வெளியிட்ட பதிப்பாளர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago