புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் எம்.பி.யான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் எம்.பி.யான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது.
காங்கிரஸின் ராகுலுக்கு எதிராகபாஜகவில் அதிரடியாக களம் இறக்கப்பட்டவர் வருண் காந்தி, நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு வாரிசான இவர் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் ஆவார். 2014-ல்சுல்தான்பூர் எம்.பி.யான இவர், 2019-ல் பிலிபித் தொகுதிக்கு மாறி எம்.பி. ஆனார். 2017 உ.பி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராவார் எனவும் பேசப்பட்டார்.
அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் கட்சித் தலைமை மீது வருண் அதிருப்தி காட்டத் தொடங்கினார். 2022 உ.பி. தேர்தலுக்கு பிறகு இந்த அதிருப்தி அதிகரித்தது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்சனம் செய்து வந்தார்.
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் வருணுக்கு கட்சி வாய்ப்புஅளிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பிலிபித்தில் வருணுக்கு பதிலாக உ.பி. அமைச்சர்ஜிதின் பிரசாத்திற்கு பாஜக வாய்ப்பு அளிக்க உள்ளது. இதனால் வருணின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
சமாஜ்வாதியில் வருண்.. இதனிடையே, சில வருடங்களுக்கு முன், வருண் காங்கிரஸில் இணையவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வருணின் கொள்கைகள் வேறு என்று கூறி ராகுல் இதற்குமுற்றுப்புள்ளி வைத்தார். இதனால்உ.பி. தலைவர்களில் ஒருவரான வருண், சமாஜ்வாதியில் இணைவதை தவிர வேறு வழியில்லாத நிலை உள்ளது. இது தொடர்பானகேள்விக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவுஎடுப்பதாக பதில் அளித்திருந்தார்.
பிறகு அமேதியில் வருண் சுயேச்சையாக போட்டியிடுவார் எனவும் இவருக்கு சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆதரவளிக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது.
வருணின் தாயான மேனகா காந்தி (67), உ.பி.யின் சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார். இவருக்கும்வரும் தேர்தலில் பாஜக வாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வருண், மேனகா,மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்உள்ளிட்டோரின் தொகுதிகளுக்குஇன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago