புதுடெல்லி
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி போன்றவர்களின் உடம்பில் முகமது அலி ஜின்னாவின் ஜீன் இன்னும் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் மஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பேசினார்.
அப்போது, “ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாபர் மசூதி, ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு தீர்ப்பு வந்தால், அயோத்தியில் பாபர் மசூதி அங்கேயே தொடர்ந்து நீடிக்கும். இடிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் புதிதாக கட்டப்படும். நீதிமன்றம் மதநம்பிக்கை அடிப்படையில் வழங்காது, சுயமாக முடிவெடுக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும்வகையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முஸ்லிம்கள் செல்வதற்கு மெக்காவும், மெதினாவும் இருக்கிறது. ஆதலால் அவர்கள் அங்கே செல்லட்டும். இந்துக்கள் எங்கே செல்வார்கள்?
பாகிஸ்தானில் சென்று ராமர் கோயில் கட்டமுடியுமா? ஒவைசி போன்றவர்களின் உடம்பில் முகமது அலி ஜின்னாவின் ஜீன் இன்னும் வாழ்ந்து வருகிறது. இதுபோன்ற மனிதர்கள் எல்லாம், நாட்டை துண்டாட நினைப்பவர்கள், யாருக்கும் அடங்காதவர்கள்.
கடவுள் ராமரின் பிள்ளைகள்தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள். நமக்குள் வெவ்வேறு விதமான வழிபாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே மூதாதையரை தொடர்ந்து வந்தவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 secs ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago