தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அணுகுமுறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன் கண்டனத்துக்குரியது. மேலும், இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.

எனவே, வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக, தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மார்ச் 21-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்தல்ஆணையம் அதனை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து தரவுகளையும் வெளியிட்ட பின் எந்த தகவலும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களும் எந்தவித சார்பும் இன்றி பொது வெளியில் பகிரப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஆகியோரின் வாதங்களை கேட்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

பலனடைந்த அரசியல் கட்சிகளுடன் நன்கொடையாளர்களின் அடையாளமும் வெளிப்படும் என்பதால் தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக எண்களை வெளியிடக்கூடாது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான பிக்கி மற்றும் அசோசெம் தாக்கல் செய்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

எஸ்பிஐ தரப்பில் ஆஜரான ஹரிஷ் சால்வே கூறுகையில், “தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ அனைத்து தரவுகளையும் வழங்கும். அதேநேரம், இந்த தகவல்கள் தொழில் நிறுவனங்கள் மீது அடுத்தடுத்து விசாரணை நடத்த கோரி நீதிமன்றங்களை அணுகும் பொது நல வழக்குகளுக்கு காரணமாகி விடக்கூடாது’’ என்றார்.

உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டல் முதல் சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், அனில் அகர்வாலின் வேதாந்தா, ஐடிசி, மஹிந்திரா, இதுவரை அதிகம் பேசப்படாத லாட்டரிமன்னன் மார்ட்டினின் பியூச்சர் கேமிங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்பத்திரங்கள் மூலம் கோடிக்கணக் கிலான ரூபாயை நிதியாக வாரி வழங்கியது சமீபத்தில் வெளி யான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்