கேரளாவைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த அகிலா என்பவர் இஸ்லாம் மதத்தைத் தழுவி தன் பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்டதோடு ஷஃபின் ஜஹான் என்ற முஸ்லிம் வாலிபரையும் திருமணம் செய்து கொண்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து தற்போது தான் தன் கணவர் ஷஃபின் ஜஹானுடன் வாழ விரும்புவதாக ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
ஆனால் இதனை எதிர்த்து எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஹாதியாவின் தந்தை அசோகன், தன் பெண்ணை மீண்டும் தன்னிடம் கொண்டு வரும் முயற்சியை மதவெறி என்று கூறுவது முழு வதந்தி, அடிப்படையற்றது என்று கூறுகிறார்.
“என் ஒரே குழந்தையின் பாதுகாப்பும், நல் வாழ்வும்தான் எனக்கு முக்கியம். என் மகள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதற்கு நான் எதிர்ப்புக் காட்டவில்லை. சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமையாகிவிடக் கூடாது என்பதுதான் என் பிரதான கவலை” என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எதிர்ப் பிரமாணப் பத்திரத்தில் ஹாதியாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படியான தனது ‘வீட்டுக்காவல்’ நாட்களில் பாஜக தலைவர் தன்னை சந்தித்ததையும் தன்னை இஸ்லாம் மதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியதையும் குறிப்பிட்டு என் தந்தை அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருசிலரின் கைப்பாவையாகத் திகழ்கிறார் என்று கூறியுள்ளார்.
ஆனால் அசோகன் தன் எதிர்ப்பிரமாணப்பத்திரத்தில் நன்றாக எண்ணெய் போடப்பட்ட ஒரு பிரச்சார எந்திரத்தின் பொறியில் சிக்கி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என் 24 வயது மகள். 24 வயதான் என் மகளுக்கு முன்பின் அறியாத சிலர் ‘கார்டியன்’ என்று வருகின்றனர். இது நியாயப்படுத்த முடியாது போன போது ஒரு போலித் திருமணத்தை ஏற்பாடு செய்து முடித்துள்ளனர். அதாவது அகிலாவை அயல்நாட்டுக்குக் கடத்த ஒரு கருவியாக திருமணத்தைப் பயன்படுத்தியுள்ளனர், என்று கடுமையாக வாதிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago