காலிஸ்தான் பிரிவினைவாதி குறித்த கேள்வியை புறக்கணித்த கனடா பிரதமர்

By ஏஎன்ஐ

காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்த கேள்விக்கு கனடா பிரதமர் பதிலளிக்காமல் சென்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

பிரிவினைவாத அமைப்புகளுக்கு ஆதரவு கிடையாது: கனடா பிரதமர்

இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத, நிதியுதவி அளித்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் கனடா ஆதரவளிக்காது என ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இன்று அவர் மனைவி, குழந்தைகளுடன் ஜமா மஸ்ஜித்துக்கு வந்தார். அவருடன் கனடா நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனும் வந்திருந்தார்.

அப்போது, ட்ரூடோவிடம் அவரது மனைவி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அந்த கேள்விக்கு எவ்வித பதிலும் தராமல் ட்ரூடோ அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இதற்கிடையில், கனடா பிரதமருடனான விருந்து நிகழ்ச்சிக்கு ஜஸ்பாலுக்கு அனுப்பப்பட்டிருந்த அழைப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக மும்பையில் உள்ள கனடா நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

மேலும்