மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 411 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: புதிய கருத்துக் கணிப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக 350 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் தொடர்பாக ‘நியூஸ் 18’ ஊடகம் சார்பில் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.

பிஹாரில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெறும், இண்டியா கூட்டணிக்கு 7 இடங்கள் கிடைக்கும்.

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெறும். ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு 17 இடங்கள் கிடைக்கும்.

மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் பாஜக கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும்.

பஞ்சாபில் 13 தொகுதிகள் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் எதிரெதிர் அணிகளாக போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணி 3-வது அணியாக போட்டியிடுகிறது. பஞ்சாபில் காங்கிரஸுக்கு 7, பாஜக கூட்டணிக்கு 3, ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கிடைக்கும்.

தென் மாநிலங்கள்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணியை சேர்ந்த திமுக - காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் கிடைக்கும்.

கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 25 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆளும் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

கேரளாவில் 20 தொகுதிகள் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கூட்டணி,காங்கிரஸ் கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 3-வது அணியாக பாஜகவும் களத்தில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 14, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பாஜகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 25 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒய்எஸ்ஆர்காங்கிரஸுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும்.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 17 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 8, காங்கிரஸ் 6, பிஆர்எஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைக்கும்.

ஜார்க்கண்டில் 14 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கு தலா ஒரு தொகுதி கிடைக்கும்.

சத்தீஸ்கரில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். காங்கிரஸுக்கு ஓர் இடம் கிடைக்கும்.

காங்கிரஸுக்கு வாய்ப்பு இல்லாத மாநிலங்கள்: ராஜஸ்தானில் மொத்தம் 25 தொகுதிகள் உள்ளன. ஆளும் பாஜக 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஒடிசாவில் 21 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் பிஜு ஜனதா தளம் 8, பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெறும்.

அசாமில் 14 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 12-ல் வெற்றி பெறும். ஏஐயுடிஎப், பிபிஎப் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கைப்பற்றும். உத்தராகண்டின் 5 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றும். குஜராத்தின் 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். ஹரியாணாவின் 10 தொகுதிகள், டெல்லியின் 7 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும். மேற்கண்ட இந்த அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஓர் இடம் கூட கிடைக்காது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக 350 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸுக்கு 49 தொகுதிகள் கிடைக்கும். இண்டியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும். இதர கட்சிகள் 27 இடங்களில் வெற்றி பெறும். தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகளும், இண்டியா கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்