ஹரியாணா மாநில பள்ளிகளில் பிப்ரவரி 27ம் தேதி முதல் காயத்ரி மந்திரத்தை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கபடும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறியுள்ளார்.
ஹரியாணாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் அரசு பதவியேற்றவுடன் பள்ளிகளில் காலை இறை வணக்கத்தில் பகவத் கீதை சுலோகங்களை சேர்த்து உத்தவு பிறப்ப்பித்து. இதை தொடர்ந்து பள்ளிகளில் காயத்ரி மந்திரத்தையும் காலை இறை வணக்கத்தில் கட்டாயம் சேர்க்க முடிவு செய்துள்ளது
இதுகுறித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறியதாவது:
ஹரியாணா மாநில பள்ளிகளில் பகவத் கீதை சுலோகம் சேர்ப்பட்டதால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் வளர்ந்துள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இறை வணக்கத்தில் காயத்ரி மந்திரத்தையும் சேர்க்க முடிவு செய்துள்ளளோம். அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிப்ரவரி 27ம் தேதி இதற்கான சுற்றிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்படும்’’ எனக்கூறினார்.
பள்ளி மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago