543-க்கு பதிலாக 544: தேர்தல் அட்டவணையில் ஒரு கூடுதல் தொகுதி ஏன்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, 543 தொகுதிகள் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 544 தொகுதிகள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை வாக்குப் பதிவு நடக்கின்றன. தேர்தல் அட்டவணையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு பதிலாக ‘544 தொகுதிகள்’ என இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் புதிய தொகுதி எதுவும் சேர்க்கப்படவில்லை. மாறாக, மணிப்பூர் தொகுதியில் நிலவும் சிறப்பு நிலையே தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக அதிகரிக்க காரணம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இவை, மணிப்பூர் புறநகர் மற்றும் மணிப்பூர் நகரம். சமீபகாலமாக மணிப்பூர் இனக்கலவரத்தை எதிர்கொண்டு வருகிறது. பழங்குடிகளான குகி சமூகத்துக்கும் மெய்த்தி சமூகத்துக்கும் இடையே ஏற்பட்ட இனக்கலவரம் தொடர்ந்து நீடித்து வருவதால், பல ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தான், அங்கும் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு மணிப்பூர் புறநகர் தொகுதியில் இரண்டு நாட்கள் தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர் நகரம் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மணிப்பூர் புறநகர் தொகுதியில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 என இரண்டு தினங்களாக வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

இதையடுத்தே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 544 என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது. | தேர்தல் அட்டவணை > ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் - தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்