காங்கிரஸை கை கழுவிய அசாம் எம்.பி. அப்துல் காலிக்

By செய்திப்பிரிவு

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.அப்துல் காலிக், கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தநிலையில், 2 பேருக்கு வரும் மக்களவை தேர்தலில்போட்டியிட காங்கிரஸ் மேலிடம் சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மற்றொரு காங்கிரஸ் எம்.பி. அப்துல் காலிக்குக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவர் கடந்த முறை வெற்றி பெற்ற பார்பேட்டா தொகுதியில், இந்த முறை அவருக்கு பதிலாக கட்சியின் சேவா தள பிரிவின் தலைவர் தீப் பயான்என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இதுவரை இரண்டு முறைஎம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பி-யாகவும் பதவி வகித்துள்ள அப்துல் காலிக், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று அப்துல் காலிக் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அவர் அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர்கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைமைகளின் நடவடிக்கைகள் காரணமாக அசாமில்காங்கிரஸ் மீதான எதிர்பார்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கான நலன்களை முன்னெடுத்துச் செல்வதில் காங்கிரஸ் தோல்வி கண்டு விட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE