திருமலைக்கு காரில் மறைத்து வைத்து துப்பாக்கியுடன் சென்ற ஒடிஸா மாநிலத்தை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாமிசம், சிகரெட், பீடி, குட்கா, மதுபானம், வெடி மருந்து பொருட்கள், துப்பாக்கிகள், கத்தி போன்றவற்றை கொண்டு செல்ல பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருப்பதியிலுள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் ஒவ்வொரு வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. மேலும், பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளும் ஸ்கேன் செய்த பின்னரே மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை காரில் தனியாக திருமலைக்கு செல்ல வந்தவரை கண்காணிப்பு ஊழியர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் முன் இருக்கை அருகே உள்ள ‘டேஷ் போர்டில்’ துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை ஓட்டி வந்தவரிடம் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அவர் ஒடிஸா மாநிலத்தை சேந்த ராமன் பானிக்ருஹி என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் கூட இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும், ராமன் பானிக்ருஹி மீது ஒடிஸாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. ஆனால், பாதுகாப்பு கருதியே துப்பாக்கி கொண்டு வந்ததாக ராமன் பானிக்ருஹி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார்.இதனால் அலிபிரி போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago