இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பெற்றுள்ளது. என்றாலும் பஞ்சாபில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்டது.
இதன்படி கேபினட் அமைச்சர்களான குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், குர்மீத் சிங் குடியன், குர்மீத் சிங் மீத் ஹேயர், பல்பீர் சிங் ஆகியோர் முறையே அமிர்தசரஸ், கதூர் சாஹிப், பதிண்டா, சங்ரூர், பாட்டியாலா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
ஜலந்தர் எம்.பி. சுஷில் ரிங்கு அங்கு மீண்டும் போட்டியிடுகிறார். ஃபதேகர் சாஹிப் தொகுதி வேட்பாளராக குர்ப்ரீத் சிங் ஜிபி அறிவிக்கப்பட்டுள்ளார். பஸ்ஸி பதானா தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான இவர் அண்மையில் ஆத் ஆத்மி கட்சியில் இணைந்தவர் ஆவார். பரீத்கோட் தொகுதியில் பஞ்சாபி நடிகர் கரம்ஜீத் அன்மோல் நிறுத்தப்பட்டு உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago