தெலுங்கு தேசம் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By என். மகேஷ்குமார்


ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதால், கூட்டணி, கட்சி தாவல்போன்ற படலங்கள் நாளுக்கு நாள் பரப்பரப்பாகநடந்து வருகின்றது. இதில், அரசியல் அனுபவமிக்க சந்திரபாபு நாயுடு மிக ஜாக்கிரதையாக காய்களை நகர்த்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து 175 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. ஆளும் ஜெகன் கட்சி இம்முறையும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார்.

சந்திரபாபு நாயுடு, பாஜக - ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த 2024 தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். தனது தோழமை கட்சிகளுக்கு 31 பேரவை தொகுதிகளையும், 8 மக்களவைத் தொகுதிகளையும் தெலுங்கு தேசம் ஒதுக்கி உள்ளது. இதில், 6 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.

2 மக்களவை தொகுதிகள் மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடிகர்சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் 17 மக்களவை மற்றும் 144 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில், ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சிகடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, முதற்கட்டமாக தமது கட்சியை சேர்ந்த 94 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. அதே சமயம் ஜனசேனா கட்சியும் தமது 5 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி தமது 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதில்34 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 27 பேர் ஆண்கள், 7 பேர் பெண்களாவர். தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் இன்னமும் 16 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காக்கிநாடா மாவட்டம், பிட்டாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து போட்டியிட போகிறேன் என ஜனசேனா கட்சி தலைவர்பவன் கல்யாண் அறிவித்துள்ளார். தற்போதையசூழலில் தனக்கு எம்பியாக போட்டியிடும் ஆசை இல்லை என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE