பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவநகர் போலீஸார் நேற்றிரவு (வியாழன்) வழக்குப் பதிவு செய்துள்ளனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012-ல் கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகைக்கு காவல்துறை வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 354 A ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று பின்னிரவு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காவல்துறை தரப்பு தகவலின்படி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தாயும், மகளும் எடியூரப்பாவை சந்தித்தபோது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகத் தெரிகிறது. அவர்கள் இருவரும் ஒரு மோசடி வழக்கில் உதவி நாடி முன்னாள் முதல்வரை சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
» காங்கிரஸுக்கே விளவங்கோடு பேரவை தொகுதி
» தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கண்காணிப்பு தீவிரம்: துணை ராணுவம் குவிப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago