புதுடெல்லி: பொறியாளராக இருந்து சமூக சேவகராக மாறிய இன்போசிஸ் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற மண்டபத்தில் உள்ள அவரது அறையில்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்போசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், குழந்தைகளுக்கான பல புத்தகங்களை எழுதியவருமான சுதா மூர்த்தி (73)கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேசமகளிர் தினத்தன்று மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.யாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார்.
கன்னடம், ஆங்கிலம் இலக்கிய படைப்பு பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார், பத்ம (2006) மற்றும் பத்ம பூஷண் (2023) விருதுகளைப் பெற்றவர் சுதா மூர்த்தி.
டெல்கோ நிறுவனத்தின் முதல்பெண் பொறியாளர் சுதா மூர்த்தி.தற்போது 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான மூலதனத்தைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ள இன்போசிஸை தொடங்க தனது கணவர் நாராயண மூர்த்திக்கு தனது அவசர சேமிப்பு நிதியிலிருந்து ரூ.10,000 வழங்கியவர். இவரது மகள் அக்�ஷதாமூர்த்தி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago