புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமல்நாத், அசோக் கெலாட் ஆகியோரின் மகன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலின்படி, காங்கிரஸ் எம்.பி.கெளரவ் கோகோய் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத்தின் மகன் நகுல்நாத் மத்தியப் பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் போட்டியிடுகின்றனர். அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியில் போட்டியிருகிறார்.
இந்தப் பட்டியலில் உள்ள 43 வேட்பாளர்களில் 10 பேர் பொது வேட்பாளர்கள், 13 ஓபிசி வேட்பாளர்கள், 10 பேர் பட்டியலின வேட்பாளர்கள், 9 பழங்குடியின வேட்பாளர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் இடம் பெற்றுள்ளனர்.
» “இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்” - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
» புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி காங்கிரஸ் வழக்கு
காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் சச்சின் பைலட்டின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, காங்கிரஸ் முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago