அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யஸ்திராவுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தளத்தில், "மிஷன் திவ்யஸ்திராவுக்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனம் (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணையின் முதல் சோதனையாகும்" என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது அக்னி 3 ஏவுகணை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், அதன் மேம்படுத்தப்பட்ட அக்னி-5 சோதனையை டிஆர்டிஓ கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது. சுமார் 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கக் கூடிய அக்னி ஏவுகணை, அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறன் படைத்ததாகும். அந்த வகையில் அக்னி 5 ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ அதிகாரிகள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE