ராஜஸ்தானில் காங். தலைவர்கள் பாஜக.வுக்கு தாவல்  

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ரிச்பால் மிர்தா, அவரது மகன் விஜய்பால் மிர்தா மற்றும் கிலாடி பைர்வா, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சிவ தல் சுரேஷ் சவுத்தரி, ராம்பால் சர்மா மற்றும் ரிஜூ ஜுன்ஜுன் வாலா, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர யாதவ், லால் சந்த் கட்டாரியா ஆகியோர் நேற்று பாஜக.வில் இணைந்தனர்.

இவர்களில் ரிச்பால் மிர்தா, முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜோதி மிர்தாவின் நெருங்கிய உறவினர். இவர் கடந்தாண்டு பாஜக.வில் இணைந்தார். தற்போது நாகர் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மிர்தா குடும்பத்தினர் ஜாட் சமூகத்தினர் அதிகம் உள்ள நாகர் தொகுதியில் செல்வாக்குமிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சுயேட்சை எம்எல்ஏ அலோக் பெனிவாலும் பாஜக.வில் நேற்று இணைந்தார். இவர் குஜராத் முன்னாள் ஆளுநர் கமலா பெனிவாலின் மகன் ஆவார். இவர்களை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE