பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ‘ராமேஷ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த 1-ம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில், சந்தேகிக்கப்படும் குற்றவாளி உணவகத்தில் இருக்கும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 1-ம் தேதிபெங்களூரு மாநகர பேருந்து மற்றும் தும்கூருவுக்கு அரசு பேருந்தில் குற்றவாளி பயணம் செய்த சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் தொப்பி, முகக் கவசம் அணியாமல் மிகசாதாரணமாக இருப்பது தெரிகிறது.இதேபோல அவர் மார்ச் 5-ம் தேதிஇரவு பெல்லாரி பேருந்து நிலையம்அருகே நடந்து செல்வது போன்ற வீடியோவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த 3 வீடியோக்களிலும் குற்றவாளி அடிக்கடி சட்டை, பேண்ட் ஆகியவற்றை மாற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தேசிய புலனாய்வு முகமை, ‘‘சந்தேகிக்கப்படும் குற்றவாளியை பிடிக்க பொதுமக்களின் உதவி தேவைப்படுகிறது. குற்றவாளி குறித்த தகவல் கிடைத்தால் 080 29510900, 8904241100 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்''என கோரிக்கை விடுத்துள்ளது.
கைதானவர்களிடம் விசாரணை: இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெல்லாரி மாவட்டத்தில் துணி வியாபாரம் செய்யும் ஒருவரை நேற்று முன் தினம் கைது செய்தனர். இதேபோல பெங்களூருவில் மினாஸ், ஷயீத் சமீல், அனஷ்த் இக்பால், ஷா ரஹ்மான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த 5 பேரையும் அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
உணவகம் மீண்டும் திறப்பு: பெங்களூருவில் குண்டு வெடித்த ராமேஷ்வரம் கஃபே உணவகம் 8 நாட்களுக்கு பிறகுநேற்று மீண்டும் பலத்த பாதுகாப் புடன் திறக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago