பெங்களூரு: கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார். அதே போல பெங்களூரு (ஊரகம்) தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் மீண்டும் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் கர்நாடக மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் போட்டியிடுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளான கீதா, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் தோல்வியடைந்தார். தற்போது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
அதே போல, பெங்களூரு (ஊரகம்) தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். மூன்றுமுறை எம்.பி ஆன இவர் மட்டுமே, கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago