“இளம்பெண்களுக்கு சிறகுகள் வழங்க ஒன்றிணைவோம்” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “இளம்பெண்களின் பாதைகளில் உள்ள தடைகளை அகற்றி அவர்களுக்கு சிறகுகள் வழங்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் எக்ஸ் தளப் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள். நாரி சக்தியைக் கொண்டாடும் தருணம் இது. ஒரு சமூகத்தின் வளர்ச்சி அதன் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் மகள்கள் விளையாட்டு தொடங்கி அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியும் தேசத்துக்கு பெருமையும் சேர்த்துள்ளனர். நாளைய இந்தியாவை அவர்கள் உருவாக்குவதற்காக, இளம்பெண்களின் பாதைகளில் எஞ்சியிருக்கும் தடைகளை தகர்த்து அவர்களுக்கு சிறகுகளை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE