பிரியங்காவின் தேர்தல் பயணம்: ரேபரேலியில் இருந்து தொடங்குவாரா?

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் பயணத்தை ரேபரேலி தொகுதியில் இருந்து தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ளதால் பிரியங்கா இங்கு போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊடக வட்டாரங்கள் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் கோட்டையாக ரேபரேலிதொகுதி உள்ளது. இந்த தொகுதியில்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூன்று முறை போட்டியிட்டு வென்றார்.

அதேபோன்று, சோனியா காந்தியின் கோட்டையாகவும் ரேபரேலி விளங்கியது. இவர், இந்த தொகுதியில் 5 முறைபோட்டியிட்டு மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கடும் போட்டிக்கிடையிலும் சோனியா வெற்றிபெற்றார். இந்த தேர்தலில், உ.பி.யிலிருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற ஒரே காங்கிரஸ் தலைவர் சோனியா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் இரும்பு கோட்டையாக ரேபரேலி உள்ளது.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சோனியா வெளியிட்ட அறிவிப்பு அந்த தொகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், மாநிலங்களவைக்கு போட்டியிட விருப்பம்தெரிவித்த அவர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தற்போது எம்.பி.யாக தேர்வாகி உள்ளார்.

சோனியா காந்தி விலகலையடுத்து, இந்திரா காந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்ட பிரியங்கா ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்களின் வளர்ச்சி பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அதற்கு இந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும்என்று பல்வேறு தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தற்போது அந்தஅழைப்புக்கு செவிசாய்க்கும் விதமாக,பிரியங்கா முதன் முறையாக இந்ததேர்தலில் ரேபரேலியில் இருந்துபோட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அமேதியில் ராகுல் காந்தி போட்டி: அதேபோன்று, ராகுல் காந்தியும் இம்முறை அமேதி தொகுதிக்கு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2019-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ராகுல் மீண்டும் எம்.பி.யானார்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் மற்றொரு கோட்டையான அமேதி தொகுதியை மீட்டெடுக்கும் வகையில் ராகுல் மீண்டும் இங்குகளமிறங்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரம், வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE