‘எங்களின் 13 எம்.பி.க்களுக்கும் மீண்டும் சீட் வேண்டும்’ - ஏக்நாத் ஷிண்டே

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் மும்பை வந்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவாரும் சிறிது நேரம் இருந்துவிட்டு, பிறகு வெளியேறினர். பிறகு, ஷிண்டேவுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஷிண்டே தனது அணியில் இருக்கும் 13 எம்.பி.க்களுக்கும் மீண்டும் ‘சீட்’ வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் இதற்கு அமித் ஷா பல்வேறு தொகுதிகளில் கள யதார்த்தத்தை அவரிடம் விளக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE