புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2040-ம் ஆண்டுக்குள் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள் இதை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் திறன் நம்மிடையே உள்ளது.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளித் துறையில் நம்மிடம் ஒற்றை இலக்கத்தில்தான் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன. இந்நிலையில் இந்தத் துறையில் தற்போது சுமார் 200 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்துள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும்விண்வெளி துறையில் ரூ.1,000 கோடிக்கும் மேலாக தனியார் துறையினர் முதலீடு செய்துள்ளனர்.
விண்வெளித்துறைக்கான பட்ஜெட் கடந்த 9 ஆண்டுகளில் 142 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago