ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் தெலங்கானா முதல்வர்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பயணித்த ஹெலிகாப்டரில் நேற்று திடீரென புகை கிளம்பியது.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், பெத்தபல்லி பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கரீம் நகரிலிருந்து நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட தயாரானார். ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக, அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு பையிலிருந்து திடீரென புகை ஏற்பட்டது. இதனைப் பார்த்த சந்திரசேகர ராவின் மெய்க்காப்பாளர், உடனடியாக செயல்பட்டு அந்தப் பையை தூக்கிச் சென்று வெளியே வீசீனார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து, அதே ஹெலிகாப்டரில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டிருந்த ஒயர்லெஸ் கருவியின் பேட்டரியில் அதிக உஷ்ணம் ஏற்பட்டதன் காரணமாக புகை கிளம்பியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்