புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்எல்ஏக்கள் தண்டனைக்குரியவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
1993-ல் மத்தியில் பிவி நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 1998ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் தற்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது, 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். எனவே, 1998ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல. நாடாளுமன்ற சலுகையை பயன்படுத்தி எம்.பி லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது. எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கினாலும் குற்றமே. லஞ்சம் வாங்குவது என்பது எம்.பி, எம்எல்ஏக்களின் தனிப்பட்ட குற்றம்.
» பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு
» அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: பதில் அனுப்பிய அரவிந்த் கேஜ்ரிவால்
மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.” இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago