போர்ட் லூயிஸ்: மொரிஷியஸின் அகலேகா தீவில் புதிய விமான தளம், படகுத் துறையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடலோர பகுதியில் மொரிஷியஸ் நாடு அமைந்துள்ளது. தீவு நாடான அங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 70 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அந்த நாட்டு மக்கள் தொகையில் தமிழ் வம்சாவளியினர் 6 சதவீதம் பேர் உள்ளனர். மொரிஷியஸின் தற்போதைய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவிந்த் ஜுக்நாத் பதவி வகிக்கிறார்.
இதன்காரணமாக இந்தியா, மொரிஷியஸ் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இந்தியாவின் உதவியுடன் மொரிஷியஸின் அகலேகா தீவில் புதிய விமான தளம் அமைக்கப்பட்டு உள்ளது. உலகின் ஒட்டுமொத்த கடல் வர்த்தகத்தில் 35 சதவீத வர்த்தகம் அகலேகா தீவுப் பகுதி வழியாக நடைபெறுகிறது.
அந்த தீவில் அமைக்கப்பட்டுள்ள விமான தளம், பயணிகளுக்கான விமான தளம் என்றுமொரிஷியஸ் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது இந்தியாவின் மறைமுக விமானப் படைத் தளம் என்றும் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மொரிஷியஸில் நவீன விமானப் படைத் தளத்தை இந்தியாஅமைத்திருக்கிறது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பின்னணியில் அகலேகா தீவில் புதிய விமான தளம், படகுத் துறை மற்றும் 6 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
விழாவில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் பேசியதாவது: புதிய விமான தளம் மூலம் மெரிஷியஸின் இதர தீவுகளுக்கும் அகலேகாவுக்கும் இடையே விமான போக்குவரத்து மேம்படும். கடல்சார் பாதுகாப்பு வலுப்படும். சமூக, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
தொலைநோக்கு பார்வை: விமான தளம், படகுத் துறை உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு இந்தியா முழுமையாக நிதியுதவி வழங்கி உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் இருநாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. இந்தியாவும், மொரிஷியஸும் இணைந்து புதிய வரலாறு படைத்து வருகின்றன. இவ்வாறு பிரவிந்த் ஜுக்நாத் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா, மொரிஷியஸ் இடையேயான வலுவான மற்றும் தனித்துவமான நட்புறவின் சாட்சியாக புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத உயரத்தை எட்டியுள்ளது. யுபிஐ மற்றும் ரூபே அட்டைகள் இரு நாடுகள் இடையிலான உறவுக்கு டிஜிட்டல் இணைப்பை வழங்கியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மொரிஷியஸ் மக்களுக்கு இந்தியா சார்பில் 400 மில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பிலான உதவி வழங்கப்பட்டு உள்ளது. அதோடு 1,000மில்லியன் அமெரிக்க டாலர்கடன் வசதியை இந்தியா வழங்கியிருக்கிறது. மொரிஷியஸின் மெட்ரோரயில் பாதைகள், சமூக மேம்பாட்டுத்திட்டங்கள், வீட்டு வசதி, மருத்துவமனை, அரசு நிர்வாக கல்லூரி, விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கு இந்தியாமுக்கிய பங்கை அளித்து வருகிறது.
புதிய விமான தளம் மொரிஷியஸின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவின் மக்கள் மருந்தகங்கள் திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அதே திட்டத்தை மொரிஷியஸில் அமல்படுத்த பிரதமர் ஜூக்நாத் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் மக்கள் மருந்தகம் திட்டத்தில் இணைந்த முதல் நாடு என்ற பெருமையை மொரிஷியஸ் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் இரு நாடுகள் இடையிலான உறவு புதிய உச்சங்களைத் தொடும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago