கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான். சந்தேஷ்காலி சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேஷ்காலி தீவுப் பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள பழங்குடியினரின் நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார். பழங்குடியின பெண்களை கட்சி அலுவலகத்துக்கு இரவில் வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தால், ஷாஜகான் மீது உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.
ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து சந்தேஷ்காலியில் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 5-ம் தேதி சோதனை நடத்தியது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளை ஷாஜகான் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். அதன்பின் ஷாஜகான் தலைமறைவாகிவிட்டார்.
ஷாஜகான் கைது செய்யப்படாததற்கு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசை கண்டித்தது. இதையடுத்து ஒரு வாரத்தில் ஷாஜகானை கைது செய்வதாக நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி அளித்தது. ஷாஜகானை கைது செய்வதற்கு மாநிலஆளுநர் 72 மணி நேரம் கெடுவிதித்தார்.
இதையடுத்து 24 மணி நேரத்துக்குள் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். சந்தேஷ்காலி தீவில் இருந்து30 கி.மீ தொலைவில் உள்ள சுந்தரவனப் பகுதியில் உள்ள பாமன்புகுர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்ததாக தெற்கு வங்காள ஏடிஜிபி சுப்ரதிம் சர்கார் தெரிவித்தார். 55 நாட்கள் தலைமறைவுக்குப்பின் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 நாள் போலீஸ் காவல்: ஷாஜகான் மீது பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்போன் டவர் உதவி மூலம் ஷாஜகானின் இருப்பிடத்தை கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபின்பு, அவரை பஷீர்ஹட் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி 10 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
6 ஆண்டுக்கு சஸ்பெண்ட்: ஷாஜகான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓபிரைன் அறிவித்துள்ளார். ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சந்தேஷ்காலி மக்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐயிடம் ஒப்படைக்க கோரிக்கை: இந்நிலையில் ஷாஜகான் மீதான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா நேற்று மனு தாக்கல் செய்தார். அதை திங்கள்கிழமை விசாரிப்பதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago