பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை அடுத்து சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு செய்திருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த போது, 'அரசியல் நலன் சார்ந்த மனு' என்று கூறி நிராகரித்தது.
இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, “என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டதை டெல்லி போலீஸ் தங்களுக்குச் சாதகமாக்கி கொண்டனர். எனவே உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தேன், இப்போது என்னுடைய குற்றச்சாட்டுகள் மீது பதிலளிக்க டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
முன்னதாக ஜனவரி 29-ம் தேதி, உச்ச நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமியிடம் ‘சுனந்தா புஷ்கர் வழக்கை ஏன் முடிக்கக் கூடாது?’ என்றும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியும் என்பதை நிரூபிக்கவும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago