எனக்கு குடிசை உள்ளது.. வீடில்லாதவர்களுக்கு அரசு வீடு கொடுங்கள்: அமைச்சரிடம் கூறிய ஏழை பெண்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே வசிக்கும் ஏழை மக்களுக்கு 2 படுக்கை அறை தொகுப்பு வீடுகளை அரசு வழங்கி வருகிறது.முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், அமைச்சருமான ராமாராவ், சிரிசில்லா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது முஸ்தாபாத் பகுதியில் கோணிப்பைகளை கூரையாக அமைத்து, வெறும் செங்கற்களால் பூச்சு வேலைகூட இல்லாத குடிசை வீடு இருந்தது. இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த வீட்டை பார்த்த அமைச்சர் ராமாராவ், வீட்டின் உரிமையாளர் யார் என கேட்டார்.

அப்போது, ஷபீனா பேகம் என்பவர் ஓடிவந்து, “இது என் வீடுதான். இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் எனக்கு முந்தைய அரசு வழங்கியது” என்றார். அதை கேட்ட அமைச்சர் ராமாராவ், “கூரைகூட இல்லாமல் உள்ள இந்த வீட்டிற்கு பதிலாக அரசு வீட்டை பெற்றுக் கொள்ளலாமே?” என அந்த பெண்ணிடம் கேட்டார்.

அந்த ஏழை பெண் சிறிதும் தயங்காமல், “எனக்காவது இந்த குடிசை வீடு உள்ளது. இதுகூட இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு 2 படுக்கை அறை வீடுகளை வழங்குங்கள்” என அமைச்சரிடம் கூறினார். இதை கேட்ட அமைச்சர் கே.டி. ராமாராவ் நெகிழ்ந்துபோனார்.

மேலும் அந்த பெண்ணின் வீட்டை புதிய கூரை போட்டு புதுப்பித்து தரும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி. ராமாராவ் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்