நெல்லூரில் ரூ.70 லட்சம் செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 27 பேர் கைது

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிர வாகன சோதனைகளில் கார்களில் கடத்தப்பட்ட ரூ. 70 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களையும், வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 27 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், நெல்லூர் மாவட்டத்தில் நேற்று கார்கள் மூலம் செம்மரம் கடத்தியதாக வேலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து நெல்லூர் நகர டிஎஸ்பி விட்டலேஸ்வர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெல்லூர் மாவட்டத்தில் இருந்து செம்மரங்கள் வெட்டி தமிழகத்திற்கு பல வாகனங்கள் மூலம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின்படி, துத்தலூரு, சங்கம், காவலி ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 கார்களில் இருந்த 50 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.70லட்சமாகும். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த வேலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு டிஎஸ்பி விட்டலேஸ்வர ராவ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்