விஜயவாடா: எதிர்வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பேசியுள்ளார்.
தனது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இதனை அவர் பேசியுள்ளார். “வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். கடந்த தேர்தலில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அதை சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தொடர மீண்டும் நாம் ஆட்சி அமைப்பது அவசியம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
வார்டு அல்லது பூத் அளவில் நம்பத்தகுந்த நபர்களை பணி அமர்த்தி அவர்களுடன் ஒருங்கிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் வாக்கு சேகரிப்பது அவசியம். தொண்டர்களின் பணிகள் மேற்பார்வையிடப்படும். எம்.எல்.ஏக்கள் அனைவரும் இதனை உறுதி செய்ய வேண்டும்” என அவர் பேசினார்.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago