முகேஷ் அம்பானி மகன் திருமண விருந்தில் 2,500 விதமான உணவு - ஆசியா முதல் மெக்சிகோ வரை நீளும் மெனு!

By செய்திப்பிரிவு

குஜராத்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - விரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகாவின் திருமணத்துக்கு முந்தைய விழாவில் பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழாவுக்கு ஏற்பாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், இவர்களின் திருமணத் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக ஜூலை 12-ல் திருமணம் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் இந்த விழாவில் விருந்தினர்களுக்குப் படைக்க 2500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து முதல் மெக்சிகோ வரை.. - இந்த விருந்து நிகழ்ச்சிக்காக இந்தூரில் இருந்து தலைசிறந்த சமையல் கலைஞர்கள் 25 பேர் தலைமையிலான குழுக்கள் ஜாம்நகர் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தூர் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுதவிர பார்ஸி வகை உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தாய்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் என பல்வேறு நாடுகளின் உணவு வகைகளும் பரிமாறப்படவுள்ளன. குறிப்பாக பான் ஆசியா உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில், மூன்று நாட்களில் 2500 வகை உணவுகள் பரிமாறப்படவுள்ளன. ஒரு நாள் விருந்தில் இடம்பெறும் ஒரு வகை உணவு மீண்டும் மெனுவில் இடம்பெறாத வகையில் பார்த்துப் பார்த்து உணவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

காலை உணவுக்கு மட்டும் 70 வகையான உணவுகள் தயார் செய்யப்படவுள்ளது. மதிய விருந்தில் 250 உணவு வகைகள் இடம்பெறும். இவைதவிர தவிர உணவு விரும்பிகளுக்காக வேகன் உணவு வகைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றையும்விட திருமண கொண்டாட்ட நாட்களில் நள்ளிரவு ஸ்நாக்ஸ் வகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்துக்கு முந்தைய வைபவத்தில் 5 முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 1000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர். திரைப் பிரபலங்கள் உள்பட பல்துறை பிரபலங்களும் திருமணத்துக்கு முந்தைய இந்த வைபவத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்