கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்லாது: காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

By செய்திப்பிரிவு

திருச்சூர்(கேரளா): கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கேரள மக்களின் உற்சாகம் பல்வேறு அளவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, 2024 மக்களவைத் தேர்தலின்போது உறுதிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கேரள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அளித்தார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை அளிப்பார்கள். 2019 மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் மோடி அரசு எனும் முழக்கத்தை நாடு கொடுத்தது. 2024 மக்களவைத் தேர்தலில், 400 தொகுதிகளில் வெற்றி எனும் முழக்கத்தை கொடுத்திருக்கிறது" என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசி தரூர், "கேரளாவில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறாது. ஏற்கனவே இரண்டு முறை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பாஜக தனது வலிமையான பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதைவிட இன்றைய கூட்டம் சிறப்பானது என நான் கருதவில்லை.

கேரளாவில் பாஜகவின் ஆதரவு தளம் என்பது சிறிய அளவிலானது. இந்துத்துவா, இந்தி, இந்து, இந்துஸ்தான் அடிப்படையிலான அவர்களின் வேண்டுகோள்களுக்கு கேரளாவில் மக்கள் ஆதரவு அளிப்பதில்லை" என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்