ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் கான்டெர் மாவட்டம் கோயலிபேடா பகுதியில் உள்ள ஹுர்தராய் வனப்பகுதியில் நேற்று முன்தினம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டைநீடித்தது. இதில், 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த டிசம்பர் 12 முதல் தற்போது வரை நடைபெற்ற என்கவுன்ட்டர்களில் இதுவரை 14மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து கான்டெர் மாவட்ட போலீஸ் எ.பி.கல்யாண் எலிசெலா கூறியதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் 175-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுவந்தனர். ஹுர்தராய் வனப்பகுதியில் நடைபெற்றநீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப்பிறகு மாவோயிஸ்ட்கள் சிலர்தப்பியோடிவிட்டனர்.அப்போது அங்கு சென்று பார்த்தபோது 3 மாவோயிஸ்ட்களின் உடல்கள் கிடந்தன. அங்கு இருந்த 3 துப்பாக்கிகளையும் பறிமுதல்செய்தோம்.
இப்பகுதியில் மாவோயிஸ்ட் கமாண்டர் ராஜு சலாம் என்பவரைத் தேடி, வேட்டையில் இறங்கினோம். அவர் தப்பியோடிவிட்டார். இறந்த மூவருமே, சலாமின் குழுவில் இருந்தவர்கள்தான் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago