விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்: ஹரியாணா மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை

By செய்திப்பிரிவு

சண்டிகர்: வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து, மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே (பிப்.11), ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார்அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல்,ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க உத்தரவிட்டார். கடந்த 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இணைய சேவைமுடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்காலிகமாக நிறுத்திவைப்பு: போராட்டத்தில் ஒருவர் உயிரி ழந்த நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை பிப்ரவரி 29-ம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்த 7 மாவட்டங்களில் இணையசேவை மீண்டும் வழங்கப்பட் டுள்ளது.

இது குறித்து அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக எங்கள் மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது. இதனால், வெளியுலகத் தொடர்பைஇழந்திருந்தோம். பல்வேறு வேலைகள் முடங்கின. தற்போது இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டிருப்பது ஆறுதலாக உள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE