கேரளாவில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இணையாக பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி 3-ம் தேதி கேரளாவின் திருச்சூரில் பாஜக சார்பில் பிரம்மாண்ட மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
திருச்சூர் நகரம் முழுவதும் அவர் வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி கடந்த ஜனவரி 17-ம் தேதி கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருப்ரயார் ராமசாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அதற்கு முன்பு ஜனவரி 16-ம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் கடந்த ஜனவரி 27-ம் தேதி பாத யாத்திரையை தொடங்கினார். அவரது பாத யாத்திரை திருவனந்தபுரத்தில் நாளை மறுதினம் நிறைவடைகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த ஆண்டில் 3-வது முறையாக கேரளாவுக்கு அவர் செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளாவின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
குறிப்பாக நடிகை ஷோபனா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி 3-ம் தேதி திருச்சூரில் நடைபெற்ற பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகை ஷோபனாவும் பங்கேற்றார். அப்போதே அவர் பாஜக வேட் பாளராக முன்னிறுத்தப் படுவது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் போட்டி...: திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் குமார் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக சசி தரூர் பதவி வகிக்கிறார். வரும் தேர்தலில் அவரே மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாயர் சமூகத்தை சேர்ந்த சசி தரூரை எதிர்த்து அதே சமூகத்தை சேர்ந்த சுரேஷ் குமார் களமிறக்கப்பட்டால் கடுமையான போட்டி நிலவக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மனைவி நடிகை மேனகா ஆவார். இத்தம்பதிக்கு ரேவதி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் என இரு மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago