ரம்ஜான் உணவு விழாவுக்கு பெங்களூருவில் எதிர்ப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: இந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ரம்ஜான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, புலிகேசிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சி. சீனிவாசாவிடம் மனு அளித் துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் உணவுத் திருவிழா காரணமாக பிரேசர் டவுனில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம்அடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை ஏற் பட்டது.

ரம்ராஜ் உணவுத் திருவிழாவினால் குப்பை, புகை, கழிவு நீர்போன்ற சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற முறையில் சமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அதனை உண்ணும் மக்கள் உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே ரம்ஜான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுனில் நடத்தக்கூடாது. இவ்வாறு மனுவில்குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்