ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எஸ்.சி., ஓபிசி மக்களை மத்திய அரசு அழைக்காதது ஏன்? - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அமேதி: பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பழங்குடி மக்களின் முகமாக அறியப்படும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்குகூட அழைப்பு விடுக்கப்படவில்லை. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி), பழங்குடிகள், ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாட்டின் 73 சதவீத மக்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

விவசாயிகளின் பணத்தை பறித்து முதலாளிகளின் பைகளை பிரதமர் மோடி நிரப்பி வருகிறார். சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. இவ்வாறு ராகுல் பேசினார்.

அமேதியில் ராகுல் காந்தி நுழைந்தபோது காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடுப்புகளை அமைத்து பாஜக தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்