புதுடெல்லி: சமண மடாதிபதி ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜ் நேற்று அதிகாலை மறைந்தார். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டம் டோங்கர்கரில் உள்ள சந்திரிகிரி தீர்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமண மடாதிபதி ஆச்சார்ய வித்யாசாகர் மகராஜ், டோங்கர்கரில் உள்ள சந்திரிகிரி தீர்த்தில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த 3 நாட்களாக ‘சலேகானா’ என்ற இறக்கும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மத வழக்கத்தை கடைபிடித்தார். இது சமண மதத்தில் ஆன்மீக தூய்மைக்காக மேற்கொள்ளப்படும் சபதம். சலேகானாவில் இருந்த ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ் நேற்று அதிகாலை 2.35 மணியளவில் சமாதி நிலையடைந்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் இரங்கல்: பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘ஆச்சார்யா ஸ்ரீ 108-வது வித்யாசாகர் மகராஜ் மறைவுக்காக அவரது பக்தர்களுக்கு எனது இரங்கல்கள். சமூகத்துக்கு அவர் ஆற்றிய மதிப்பிட முடியாத பங்களிப்புக்காக, அவர் வருங்கால தலைமுறையினரால் எப்போதும் நினைவுகூரப்படுவார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago